செய்திகள் மாநில செய்திகள் உத்தரகாண்டில் நிலச்சரிவு…200 யாத்திரீகளின் நிலை கவலைக்கிடம்….!!! Sathya Deva1 August 20240126 views உத்தரகாண்டில் உள்ள தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மற்றும் கடைகள் அடுத்து செல்லப்பபட்டன. இந்த சம்பவத்தின் ஒரு பெண்ணும் அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இந்த நிலையில் கேதர்நாத்தில் நேற்று மேக வெடிப்பு ஏற்பட்டு திடீரென பெய்த மழையால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடைபாதையில் சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கேதர்நாத்தில் கிட்டத்தட்ட 200 யாத்திரீகள் சிக்கி தவித்தனர். இந்த நிலை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு மீட்பு குழுயுடன் விரைந்து வந்தனர். இதை எடுத்து கேதர்நாத்தில் 200 யாத்திரீகள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் யாருக்கும் எந்த காயமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.