செய்திகள் மாநில செய்திகள் உத்தரபிரதேச மாநிலம்…பாஜக கோடி பொருத்திய காரில் உல்லாசம்…!!! Sathya Deva15 August 2024077 views உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கலிகா ஹவேலி உணவகத்தின் வெளியே பாஜக கோடி பொருத்திய ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பகிர்ந்து விமர்சித்துள்ளது. அந்த பதிவில், “இது பாரபங்கியின் கலிகா ஹவேலி உணவகம். இந்த குடும்ப உணவகத்திற்கு முன்பு பா.ஜ.க கொடியுடன் கூடிய காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள். உத்தரபிரதேசத்தில், பாஜக தலைவர்கள் அனைத்து தவறான செயல்களையும் செய்ய லைசன்ஸ் பெற்றுள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாராலும் அவர்களை தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய, இந்த பாஜக காரர்களை துடைத்தெறிய வேண்டும்” என்று பதிவிடப்பட்டுள்ளது. பாஜக கொடி பொருத்தப்பட்ட கார் ரேபரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.