உத்தரப்பிரதேச மாநிலம்…சிகப்புத் தொப்பி அரசியல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் பெற்ற வெற்றி அம்மாநில அரசியலிலும் பாஜகவுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கான்பூர் நகரில் கடந்த வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசுகையில், சமாஜ்வாதிகட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிகப்பு என்பது உணர்வுகளின் நிறம். கடவுள் துர்கையின் நிறம்.

ஆனால் தற்போது அவர்கள் [பாஜக] நமது தொப்பியைக் கிண்டலடித்து வருகின்றனர். எங்களது தொப்பியைக் கிண்டலடிப்பதற்கு முன் அவர்களுக்கே முதலில் தொப்பி தேவைப்படுகிறது.எங்களின் செயல்கள் நல்லவிதமாக உள்ளன. குறைத்தபட்சம் எங்களின் தலையில் முடி உள்ளது, நாங்கள் தொப்பி அணிகிறோம்.முடி இல்லாதவர்கள்தான் முதலில் தொப்பி அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் உ.பி முதல்வர் யோகி ஆதித்தநாத்தை அகிலேஷ்யாதவ் மறைமுகமாகச் சாடியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!