செய்திகள் மாநில செய்திகள் உத்திரபிரதேசம்…கடித்த பாம்பை கையில் கொண்டு வந்ததால் பரபரப்பு…!!! Sathya Deva24 August 2024095 views உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ராமச்சந்திரா என்பவரின் மகன் ஹரி வசித்து வருகிறார். அவருக்கு திடீரென கைவிரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஹரி தன்னை கடித்த பாம்பு இதுதான் என காட்டி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க சொன்னார். அவரது தைரியத்தை கண்டு டாக்டர்கள் வியந்தனர். பாம்பு கடித்த பின்பும் ஹரி நிதானமாக பேசிக் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது. தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.