செய்திகள் மாநில செய்திகள் உத்திரபிரதேச மாநிலத்தில்…6வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி…!!! Sathya Deva14 August 2024097 views உத்திரபிரதேச மாநிலத்தில் காசியாபாத் நகரில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மாடியிலிருந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது திடீரென்று அந்த சிறுமியின் செல்போன் கீழே தவறி விழுந்தது. அப்போது அதைப் பிடிக்க முயன்ற அந்த சிறுமி ஆறாவது மாடியில் இருந்து களிமண் நிறைந்த பூந்தொட்டி மேல் விழுந்துள்ளார். உடனே அந்தச் சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அந்தச் சிறுமிக்கு வலது காலில் எலும்பு முறிவும், தலையின் சிறிய அளவிலான காயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயரமான இடங்களில் இருந்து செல்ஃபி மற்றும் ரிலீஸ் எடுக்க முயலும் போது தவறி விழுந்து பலர் உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.