உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்தர பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பி. டி ஆசிரியர் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த டிசம்பர் மாதம் சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்து தனது வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அந்தச் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதன் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு உண்மை தெரிய வந்தது. ஆனால் பெற்றோர்கள் ஊரார் முன் அவமானப்பட கூடுமோ என்று பயந்து போலீசின் புகார் அளிக்க தயங்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி அந்த பி.டி ஆசிரியர் ரூபாய் 30 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என எச்சரித்துள்ளார் ஆனால் அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவரது தந்தை போலீசின் புகார் அளித்துள்ளார்.இதனால் பி.டி ஆசிரியர் தலைமறைவானார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தச் சிறுமி உடல் நிலை 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.