செய்திகள் மாநில செய்திகள் உத்திரபிரதேச மாநிலம்….பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் தலாக் கூறிய கணவன்…!!! Sathya Deva24 August 2024063 views உத்திரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். இவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி அயோத்தியில் வசித்து வந்த அர்ஷத் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் திருமணம் முடிந்ததும் அயோத்தியில் வசிக்க தொடங்கினார். மரியம் என்பவருக்கு அயோத்தி நகர சாலைகள் அங்கு உள்ள வளர்ச்சி, அழகு போன்றவை அவருக்கு பிடித்திருந்தது. இதனால் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் பிரதமர் மோடியையும் மரியம் புகழ்ந்து பேசி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் அர்ஷத் தன் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின்பு பெரியவர்கள் சமாதானத்திற்கு பிறகு மரியம் மீண்டும் அயோத்தியில் கணவர் வீட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அர்ஷத்துக்கு இன்னும் கோபம் குறையாத காரணத்தினால் மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால் தன் மனைவியை பார்த்து மூன்று முறை தலாக் கூறினார் என கூறப்படுகிறது. மேலும் அர்ஷத்தின் குடும்பத்தினர் மரியமின் கழுத்தை நெரிக்க முயன்றுள்ளனர். இதனால் போலீசில் மரியம் புகார் அளித்துள்ளார். உடனே காவல்துறையினர் அவருடைய குடும்பத்தினர் எட்டு பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.