செய்திகள் மாநில செய்திகள் உத்திரபிரதேச மாநிலம்…புடவை வாங்கி கொடுக்காமல் இருந்ததால் புகார்…!!! Sathya Deva31 July 2024092 views உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண்ணுக்கு 2022 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன ஜோடிகள் இருவரும் சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். ஒரு நாள் புதிதாக சேலை வாங்கி தர சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து கணவன் தனக்கு சேலை வாங்கி தரவில்லை என்றும் என்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இதை எடுத்து கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. பின்னர் கணவன் புடவை வாங்கிக் கொடுத்த பின்னர் மனைவி சமாதானமானதால் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.