உத்திரபிரதேச மாநிலம்…வெள்ளத்தில் சிக்கிய பெண்…வைரலான வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் கனமழை பெய்து சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தாஜ் ஹோட்டல் பாலத்தில் கீழ் வெள்ளம் தேங்கி இருந்த சாலையில் பைக்கில் ஒரு ஆணும் பெண்ணும் வந்துள்ளனர். அப்போது அந்த வழியில் இருந்த ஒரு கும்பல் அவர்களின் மீது தேங்கி இருந்து தண்ணீரை தெளிக்க தொடங்கியது. பின்னர் பைக்கை பின்னால் இருந்து இழுத்து நிறுத்தினர்.https://twitter.com/ians_india/status/1818618356074705185?r

இதனால் நிலை தடுமாறிய இருவரும் சாலையில் தேங்கி இருந்த வெள்ளத்தில் விழுந்தனர். அதன் பின்பு பாலத்தில் அடியில் இருந்த அந்த கும்பலை அங்கிருந்து போலீசார் விரட்டி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலானதை அடுத்து லக்னோவின் உதவி காவல் ஆணையர், கூடுதல் காவல் ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!