Home செய்திகள்உலக செய்திகள் உலகின் மிக வயதான பெண்மணி…மரியா பிரான்யாஸ் 117 வயதில் உயிரிழந்துள்ளார்….!!!

உலகின் மிக வயதான பெண்மணி…மரியா பிரான்யாஸ் 117 வயதில் உயிரிழந்துள்ளார்….!!!

by Sathya Deva
0 comment

உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார். இவர் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.இவர் 1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்..

வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுயுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.