Home செய்திகள்உலக செய்திகள் “உலகின் 2-வது மிகப்பெரிய இந்து கோவில்”…. திறப்பு விழா எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

“உலகின் 2-வது மிகப்பெரிய இந்து கோவில்”…. திறப்பு விழா எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

by dailytamilvision.com
0 comment

இந்தியாவில் போசசன்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சாஸ்தா என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலை அமெரிக்காவில் கட்டி முடித்துள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பினால் டெல்லியில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில் உள்ள ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் அக்ஷர்தாம் திருக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஆசியாவின் கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக உலகின் 2-வது மிகப்பெரிய இந்து கோவிலாகும். இந்த கோவில் தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தின் படி சுமார் 183 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் பணிகள் நிறைவடைய 12 வருடங்கள் ஆகியுள்ளது. இந்தக் கோவிலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசை கலைகள் மற்றும் நடன வடிவங்கள் போன்றவைகள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மூலவர் சிலை தவிர 12 விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள், 9 பிரமிடு வடிவ கோபுரங்கள், இந்திய கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் குவி மாடம், பிரம்ம குண்ட் என்று அழைக்கப்படும் பாரம்பரிய இந்திய படிக்கிணறு போன்றவைகள் உள்ளது. இந்த கோவிலை கட்டுவதற்கு சுண்ணாம்பு, கிரானைட், பளிங்கு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கல் உள்ளிட்ட 2 மில்லியன் கன அடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்ம குண்ட் படிகிணற்றில் 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் ‌ கொண்டுவரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோவிலின் திறப்பு விழா குறித்த தேதியை தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி இக்கோவில் அக்டோபர் 8-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. மேலும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் கோவிலில் தரிசனத்திற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.