செய்திகள் மாநில செய்திகள் உலகிலேயே இந்தியா பாம்பு கடியில் முதலிடம்… எம்.பி.ராஜுவ் பிரதாப் ரூடி Sathya Deva30 July 2024085 views பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பற்றி எம்.பிக்கள் கேள்விகளை எழுப்பினர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 30 -40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி விவாதத்தில் போது இந்த பிரச்சினை எழுப்பினர். அதற்கு எம்.பி . ராஜுவ் பிரதாப் ரூடி கூறுகையில் பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஒரு ஆண்டுக்கு 50,000 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் கூறினார். மேலும் இந்தியா முழுவதும் இந்த சூழல் நீடித்து வருகிறது. இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார்.