Home பல்சுவைட்ரெண்டிங் #எங்கள்காவிரி_எங்கள்உரிமை; கர்நாடாவில் போராட்டம்… தமிழகத்தில் ட்ரெண்டிங்கில்… தெறிக்கவிடும் ட்விட்டர் ஹேஷ்டேக்..!!

#எங்கள்காவிரி_எங்கள்உரிமை; கர்நாடாவில் போராட்டம்… தமிழகத்தில் ட்ரெண்டிங்கில்… தெறிக்கவிடும் ட்விட்டர் ஹேஷ்டேக்..!!

by dailytamilvision.com
1 comment

கர்நாடகா அணைகளில் இருந்து காவேரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாண்டியா மட்டும் இன்றி மைசூர், சாம்ராஜ்நகர், ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்க்கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் ஜனதா தளம் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆனாலும் விவசாயிகள்,  கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மாண்டியா நகரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் ஜனதா தளம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று மாண்டியாவில் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இந்த முழு அடைப்புக்கு மாண்டியா நகரில் உள்ள தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் ஆதரவளித்து கடைகளை மூட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு பஸ்கள் வழக்கம்போல இயங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டத்தின் போது சட்டத்தை கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அமைச்சர் பரமேஸ்வரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாண்டியன் நகர் மட்டுமின்றி ஸ்ரீரங்கப்பட்ணாவில் உள்ள கிருஷ்ணராஜர் அணைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவேரியில் தமிழக உரிமையை விடமாட்டோம் என்பதை வலியுறுத்தி #எங்கள்காவிரி_எங்கள்உரிமைஎன்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

Karnataka has been using water from Krishnaraja Sagar, Kabini, Hemavathi, and Harangi reservoirs for its summer irrigation. With this move of the Karnataka government, there will be no water for Kuruvai crops in Tamil Nadu.#எங்கள்காவிரி_எங்கள்உரிமை pic.twitter.com/VAEn6uMWqg

— தர்மர் (@KalMTkRzZk8iJdM) September 24, 2023

#எங்கள்காவிரி_எங்கள்உரிமை pic.twitter.com/cFR2rQEHnK

— பறைஊடகம் (@paraionline) September 24, 2023

Our brother Vignesh died while fighting for our rightful share of water in the Kaveri river. He gave his life for our rights! He sacrificed himself in the fire for our farmers and our family’s lives. We will always remember him.#எங்கள்காவிரி_எங்கள்உரிமை pic.twitter.com/13CnVAE6YX

— Paari Saalan (@SaalanPaari) September 24, 2023

Dear Kannadigas, life wouldn’t exist without water. The Cauvery River has been flowing long before we drew our borders; it’s Mother Nature’s nourishment for all her children. She desires us to share it, equally! We Tamils revere Cauvery. It is our right.#எங்கள்காவிரி_எங்கள்உரிமை pic.twitter.com/WdDCFXmR9Y

— Paari Saalan (@SaalanPaari) September 24,

You may also like

1 comment

Raguvaran R 30 April 2024 - 12:45

Nice

Reply

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.