எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி…. வாழ்த்து தெரிவித்த தவெக கட்சித் தலைவர் விஜய்….!!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “லோக்சபாவில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!