என் தேடல் சினிமா மட்டுமே…. விரைவில் வரவிருக்கும் படம்…. நடிகர் ஜீ.வி. பிரகாஷ்குமார் பேட்டி….!!

தமிழ் திரை உலகில் வெயில் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்குமார். இவர் அடுத்தடுத்து தொட்ட திரைப்படங்கள் அனைத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அவதரித்து பல ஹிட் படங்கள் நடித்துள்ளார். அதேபோல் இந்த வருடம் மட்டும் அவருக்கு டியர், ரெபல் மற்றும் கள்வன் உள்பட மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இதில் தற்போது திரைக்கு வர இருக்கும் கிங்க்ஸ்டன் திரைப்படம் அவரின் நடிப்பில் வெளியாகின்ற 25-வது படமாகும்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ்குமார் கூறியதாவது, இந்த வருடம் எனக்கு ராசியான வருடமாகவே அமைந்திருக்கிறது. தற்போது விரைவில் வரவிருக்கும் கிங்க்ஸ்டன் திரைப்படம் எனது திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகின்ற படமாகும். மேலும், இத்திரைப்படத்தில் கிராபிக்ஸ் பணிகளுக்காக பல கோடிகள் செலவிடப்பட்டிருக்கிறது. இதில் என்னை பொறுத்தவரை திரை உலகில் உழைத்துக் கொண்டு இருக்க வேண்டும் இவற்றில் உழைப்புக்கு ஏற்ற பலன் எதிர்பாராத விதமாக நமக்கு கிடைக்கும் தருணத்தில் நிச்சயமாக கிடைக்கும் திரை உலகில் நேர்மையாக உழைத்தால் அது நம்மளை கைவிடாது. என்னுடைய தேடல் அனைத்தும் தற்போது சினிமாவில் மட்டுமே. இசையிலும் மற்றும் நடிப்பிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்காக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!