உலக செய்திகள் செய்திகள் எலான் மஸ்க் நிறுவனத்தை இட மாற்ற போகிறார்…. பல்வேறு சட்டங்களால் பாதிப்பு…!! Sathya Deva18 July 2024091 views அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்(ட்விட்டர்) என்ற இரு நிறுவனங்களை வைத்துள்ளார். இந்த நிறுவனம் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -ல் அவர் அளித்த பேட்டியில் இரண்டு நிறுவனங்களின் தலைமை இடத்தை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ராக்கெட் சோதனை தளமான star base பகுதிக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். மேலும் இவர் கலிபோர்னியா மாகாணத்தில் சமீப காலமாக கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்டங்களால் குடும்பங்களும் , நிறுவனங்களும் பெரிதும் பாதிப்பு உள்ளாகும் என்பதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்து உள்ளேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.