Home செய்திகள்உலக செய்திகள் எலான் மஸ்க் வாழ்த்து… ட்விட்டரில் 10கோடி ஃபாலோயர்களை கொண்ட மோடி…!!!

எலான் மஸ்க் வாழ்த்து… ட்விட்டரில் 10கோடி ஃபாலோயர்களை கொண்ட மோடி…!!!

by Sathya Deva
0 comment

இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் 2009 ஆம் ஆண்டு எக்ஸ் (ட்விட்டர்)தளத்தில் கணக்கு தொடங்கினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு 10 கோடி ஃபாலோயர்களை எட்டியுள்ளார் .இது மற்ற அரசியல் தலைவர்களில் ஃபாலோயர்களை ஒப்பிடும்போது பிரதமர் மோடி அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனக்கு கூறப்படுகிறது. இந்த வகையில் பிரதமர் மோடியின் ட்விட்டர் தளத்தை பின் தொடர்ந்தவரின் எண்ணிக்கை கடந்த ஜூலை 14ஆம் தேதி 10 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இதுபோன்று சில தலைவர்களுக்கு மட்டுமே அதிகளவில் ஃபாலோயர்கள் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் உலகில் அதிகம் பின் தொடரப்படும் தலைவர் ஆனதால் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் தளத்தில் பின் தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.