மதுரை மாவட்ட செய்திகள் எல்லா வசதியும் இருக்கு….இதான் காரணமா….3 மாணவர்கள் ஒரு ஆசிரியர்….!! Gayathri Poomani28 June 20240118 views மதுரை மாவட்டத்திலுள்ள பி. இராமநாதபுரம் பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த வருடம் கல்வி ஆண்டில் ஒன்னு, மூணு, ஐந்து ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். பின்னர் இந்த மூன்று மாணவர்களுக்காக அருகாமையில் இருக்கும் பள்ளியிலிருந்து காலை உணவு திட்டத்தின் மூலமாக உணவு சமைத்தும் மற்றும் மதிய உணவு மற்றொரு பகுதியில் இருந்தும் கொண்டுவரப்பட்டு கொடுக்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை இல்லாதது பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, எங்களது கிராம பகுதியில் 150 பேர் வாழ்கின்றார்கள். மேலும் பெரும்பாலானோர் பணிக்காக தங்களது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளனர். எனவே குறைந்த அளவில் மக்கள் வசித்து வருகின்ற காரணத்தினால் பள்ளி செல்கின்ற மாணவர்கள் அதிகம் இல்லாததால் சேர்கை குறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.