செய்திகள் மாநில செய்திகள் ஏராளமான மான்கள் கூட்டம்…கண்டு ரசித்த மக்கள்…!!! Sathya Deva11 August 2024090 views ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளன. நாராயணன்பேட்டை மாவட்டம், மோகனூர் மலைகளில் இருந்து வரும் மழை நீரால் அப்பகுதி முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அச்சம்பேட்டை சிவன் கோவில் சுற்றுப்புறங்களில் சுற்றித் திரிகின்றனர். இதேபோல் ஏராளமான மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து துள்ளி குதித்து விளையாடியது. இதனை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.