உலக செய்திகள் செய்திகள் ஏலியன் வடிவில் புதிய உயிரினம்…. ஆச்சரியப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்….!! Inza Dev11 June 2024058 views உலகில் எத்தனையோ அதிசயங்கள் நிறைந்திருந்து நம்மை ஆச்சரியப்படுத்துவது அவ்வப்போது நடக்கும். அப்படி தான் தற்போது பசுபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் அதிசய உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் வேற்று கிரக ஏலியனைப் போன்றே உள்ளது. ஹவாய் தீவின் அருகே இருக்கும் பசுபிக் கடல் பிரதேசத்தின் 18,045 அடி ஆழத்தில் இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி தன்மை கொண்ட இந்த உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் UNICUMBER என்று வகைப்படுத்தியுள்ளனர். அதேபோன்று கடல் பன்றி என்ற உயிரினமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது பசுபிக் கடல் பிரதேசத்தின் ஆழமான பகுதியில் வாழும் பல உயிரினங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.