செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! dailytamilvision.com17 April 20240180 views செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா சிட்டி பகுதி அமைந்துள்ளது. இங்கு iphone உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு iphone 14 மற்றும் 15 ஸ்மார்ட் போன்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.