செய்திகள் ஐ.சி.எஸ்.ஐ…2030-ல் இந்தியா 7 டிரில்லியன் பொருளாதாரம்…!!! Sathya Deva19 August 20240122 views வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்துதல் ஆகியவற்றிற்காக தேவை அதிகரிக்கும் என ஐ.சி.எஸ்.ஐ. தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனத்தின் நிர்வாகத்தை கட்டமைப்பது உள்ளிட்டவைகளில் நிறுவன செயலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.வருடத்திற்கு 2,500 பேர் என்ற அளவில் ஐ.சி.எஸ்.ஐ செயலாளர்கள் உறுப்பினர் வழங்கி வருகிறது. 2030-ல் இந்தியா 7 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாகும் என எதிர்பார்க்கப்படுகுறது. மேலும் இளம் திறமையாளர்களை தொழிலில் ஈர்ப்பதற்காக, நிறுவன செயலர் நிர்வாக திட்டத்தில் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளை நேரடியாக பதிவு செய்ய தொடங்கியுள்ளது. கார்ப்பரேட் போர்டுகளில் பின்பற்றப்படும் செயலக நடைமுறைகளில் ஒரே சீரான தன்மையைக் கொண்டுவர ஐ.சி.எஸ்.ஐ. செயலக தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 73 ஆயிரம் நிறுவன செயலாளர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிறுவன செயலாளர்களாக ஈடுபட்டு வருகினர்.