ஐ.சி.சி வெளியிட்ட பந்துவீச்சாளர்கள் தரவரிசை….அஸ்வின் முதலிடம்…!!!

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 847 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்திய வீரர் பும்ரா 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 322 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அக்சர் படேல் 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வா விராட் கோலி ஆகியோர் 6, 7, 8-வது இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!