செய்திகள் மாநில செய்திகள் ஒடிசாவில்…பறவை காய்ச்சல் பரவல்…!!! Sathya Deva27 August 2024056 views ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் பிபிலி பகுதியில் பறவை காய்ச்சல் வைரஸ் பரவுவதை சுகாதாரத்துறை அமைப்பினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளும் எச்சரிக்கையும் எடுத்துள்ளனர். எனவே இந்த விபிலி பகுதியில் உள்ள கோழி பண்ணைகளின் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிக்காக 13 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும் சில பண்ணைகளின் உரிமையாளர்களை இந்த பணிகளை மேற்கொண்டனர் என கூறப்படுகிறது. இந்த பணியானது 23ஆம் தேதி தொடங்கி இன்று மாலை நடைபெற்றது. இதில் மொத்தம் 11,700 கோழிகளைக் கொன்றதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இந்த பணிகள் மீண்டும் தொடர்ச்சியாக வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.