செய்திகள் மாநில செய்திகள் ஒருமாத சம்பளத்தை கேரள காங்கிரசுக்கு நன்கொடை…ராகுல் காந்தி…!!! Sathya Deva4 September 2024071 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் வயநாடு நிலச்சரிவுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தனது ஒருமாத சம்பளத்தை கேரள காங்கிரசுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். நிலச்சரிவில் தங்கள் அன்புக்குரி உரியவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த வயநாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பின் ஒரு பகுதியாக காங்கிரசின் மாநிலப் பிரிவு சேகரிக்கும் நிதிக்கு இந்த நன்கொடை வழங்கப்பட உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.