மயிலாடுதுறை மாவட்ட செய்திகள் ஒரு சக்கர சைக்கிள் ஓட்டும் முதியவர்….ஆச்சரியத்தில் இருக்கும் பொதுமக்கள்….!! Gayathri Poomani28 June 2024083 views மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பொறையார் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் வசித்து வருகின்ற ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருவர் ஒரு சக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைத்து தற்போது ஓட்டி வருகிறார். இவர் தினமும் காலை, மாலை ஆகிய இரு வேலையும் முக்கியமான சாலைகளில் அந்த ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வருகின்றதை பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதனை அடுத்து அவர் வயது முதிர்ந்த தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாகவும் ஆரம்ப காலத்தின் பாரம்பரியத்தை நினைவு கொண்டு வரும் வண்ணம் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின் படிப்படியாக மற்றொரு சக்கரம் பொருத்தியும் இரு சக்கரமாக சைக்கிள்கள் வடிவமைக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.