Home செய்திகள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலையா..?ஆதரிக்கும் ஐ.டி நிறுவனம்…எதிர்க்கும் பணியாளர்கள்…

ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலையா..?ஆதரிக்கும் ஐ.டி நிறுவனம்…எதிர்க்கும் பணியாளர்கள்…

by Sathya Deva
0 comment

கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அந்த மாநில அரசு திருத்தம் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது. அந்த சட்டத்தில் 14 மணி நேரம் வேலை என்பதை கொண்டு வர வேண்டும் என ஐடி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. தற்போது உள்ள தொழிலாளர்களின் சட்டங்களின் படி அதிகபட்ச வேலை நேரம் என்பது 12 மணி நேரம் ஆகும். ஆனால் ஐடி போன்ற துறையில் உள்ள பணியாளர்களின் நிறுவனத்தினர் ஒரு நாளைக்கு 12 – 14 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என நிறுவனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்திடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை கடுமையாக பாதிக்க கூடியதாகவும் உள்ளது என்று கடின குரல்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கர்நாடகவில் சேர்ந்தவர்களுக்கே அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.