உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக்கில் அர்மான் டுப்ளண்ட்டிஸ் தங்கம் வென்றார்….யூசுப் ஸ்டைலில் வெற்றி குறி…!!! Sathya Deva6 August 2024044 views துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர் -சரத் ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளி பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக்- செவ்வல் இலைதா தர்ஹான் வென்றார். ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு ஒற்றை கையில் எந்தவித சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளி மெடலை தட்டி சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் யூசிப் பற்றி அதிகமாக பரவி கொண்டிருந்தது. மேலும் யூசிபின் ஸ்டைலான வெற்றி மற்றைய ஒலிம்பிக் வீரர்களுக்கும் பெரும் ஊந்துதலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் ஸ்வீடன் சார்பில் பங்கேற்ற தடகள வீரர் அர்மான் டுப்ளண்ட்டிஸ் தங்கம் வென்றார். இவர் உலக சாதனையை படைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது இவர் சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகிறார். இதற்கு காரணம் அவர் மகிழ்ச்சியின் டுப்ளண்ட்டிஸ் இட்ட வெற்றி குறிதான் அனைவரையும் தற்போது கவர்ந்துள்ளது என கூறப்படுகிறது. அதாவது யூசிப் போல் இவரும் துப்பாக்கி போல் தன் கைகளை நீட்டி வெற்றி குறி செய்தார் என கூறப்படுகிறது.