உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது…3 லட்சம் மக்கள் கண்டு களிப்பு….!!! Sathya Deva29 July 2024041 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 அன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளை சேர்ந்த 6,800 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மார்டன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீன்ஸ் நாட்டை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகுத்தனர். இந்த அணிவகுப்பை 3 லட்சம் பேர் கண்டுகளித்துயுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட கால்ட்ரனில் ஜோதியை ஏற்றினர்.