உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் தொடரை முன்னிட்டு…மர்ம நபர்கள் நாச வேலை…!!! Sathya Deva26 July 20240108 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்ஸில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் இன்று பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒலிம்பிக் விழா நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க்கும் வீரர் வீராங்கனைகளை 600 படகுகளின் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதாப ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் அதிவேக ரயில் சேவையை மர்ம நபர்கள் நாச வேலை செய்து முடக்கியிருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் சீர் குழைந்து இருப்பதாகவும் சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் சில மெட்ரோ ரயில் ரத்து செய்ய வேண்டிய நிலை இருக்கும். ஜூலை 29 திங்கட்கிழமை அன்று இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ரயில் புறப்படும் மண்டபத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.