Home செய்திகள்உலக செய்திகள் ஒலிம்பிக் தொடர்…டிக்கெட் விற்பனையில் பிரான்ஸ் முதலிடமா…!!!

ஒலிம்பிக் தொடர்…டிக்கெட் விற்பனையில் பிரான்ஸ் முதலிடமா…!!!

by Sathya Deva
0 comment

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஒலிம்பிக் தொடரில் 7500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் 3 லட்சம் பார்வையாளர்கள் மற்றும் விஐபிகள் உடன் பாரிஸ் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் 2024 ஆண்டு போட்டியில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் விற்பனையாகி கொண்டு வருகின்றது. இதில் 9.7 மில்லியன் டிக்கெட்கள் விற்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு 10 மில்லியன் டிக்கெட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த டிக்கெட்டின் விற்பனை அளவு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய டிக்கெட் விற்பனையில் 1966 ஆம் ஆண்டு அட்லாண்ட முதலிடம் பிடித்தது. அப்போது 8.3 மில்லியன் டிக்கெட் விற்கப்பட்டன. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கி உள்ளூர் இணை இளைஞர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு விளையாட்டுப் போட்டிக்கான அணுகலை விரிவு படுத்துவதற்காக சுமார் ஒரு மில்லியன் இலவச டிக்கெட் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.