உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் போட்டிகள்…இரு பதக்கங்களை வென்ற மோனா அகர்வால்…!!! Sathya Deva30 August 2024096 views பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர். பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.