ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ்…அவரின் தாய்,தந்தை மகிழ்ச்சி…!!!

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரை இந்தியா 4 வெண்கலம் வென்றுள்ள நிலையில், நீரஜ் முதல் வெள்ளியை வென்றுள்ளார். இதனால் நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நீரஜின் தாய் சரோஜா மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது என்றும் நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார்.

மேலும் நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சி அவரும் மகன் போலத்தான்என தெரிவித்தார். அவரது தந்தை சதீஷ் குமார், எல்லோருக்கும் அவர்களின் நாள் என்பது ஒன்று இருக்கும், இது பாகிஸ்தானின் நாள், நாம் வெள்ளி வென்றுள்ளோம். அதுவே மிகவும் பெருமைக்பெருமைக்குரியது என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடத்த ஒலிம்பிக்சில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!