Home செய்திகள்உலக செய்திகள் ஒலிம்பிக் போட்டியை நிறுத்த சதியா…? பிரான்சில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு…

ஒலிம்பிக் போட்டியை நிறுத்த சதியா…? பிரான்சில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு…

by Sathya Deva
0 comment

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டு வருகின்றன. இதில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உட்பட மொத்தமாக 10, 714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளின் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் பாரிஸ் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. இதனால் பிரான்சில் அதிவேக ரயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டது. சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலமை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் பிரான்ஸ் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பு துறை செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவையான பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த பாதிப்பு நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துமா என்ற கேள்வி அனைத்து நாடுகளுக்கும் எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.