உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார்.
இந்த போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் அர்ஜுன் பாபுதா 630. 1 புள்ளிகளை பெற்று 7 வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் மற்றொரு இந்திய வீரர் சந்திப் சிங் 12-வது இடத்தை பெற்று வெளியேறியுள்ளார். இதன் இறுதிப் போட்டி நாளை மதியம் 3.30 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.