ஒலிம்பிக் போட்டி…வினேஷ் போகத் தகுதி நீக்கம்…!!!

ஒலிம்பிக் போட்டி தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 63வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லேபான் இருவரும் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த ஹில்டெப்ரண்ட்- ஐ எதிர் கொள்ள இருந்தார். இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடியிருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!