உலக செய்திகள் செய்திகள் ஒலிம்பிக் போட்டி…7 மாதகர்ப்பமாக இருந்த வீராங்கனை… Sathya Deva31 July 2024097 views பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் எகிப்து நாட்டு வாள் வீச்சு வீராங்கனை நாடா ஹபீஸ் 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் கலந்து கொண்டது நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் களத்தில் இருந்தது இரண்டு பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது மூன்று பேர் நான் ஒன்று மற்றொன்று என் எதிரணி வீராங்கனை அந்த மூன்றாவது நபர் இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டி குழந்தை என்று தன் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். ஒமிக்கில் பெண்கள் வாள் வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்கா வீராங்கனை எலிசபெத் உடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபீஸ் சுற்று 16 க்கு முன்னேறினார். நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டிகளின் தென் கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் உடன் மோதி நாடாக பேஸ் 15-7 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.