பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரீசில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டது. சில விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஹோட்டல்களை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏசிகளை வழங்கி உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் வசதியாகத் தங்குவதற்கும் ஓய்வு நேரத்தை அனுபவிக்கவும் முடியும். இந்த ஏ.சி செலவை விளையாட்டு ஏற்றுக் கொடுத்துள்ளது என கூறப்படுகிறது.