ஒலிம்பிக் ஹாக்கி…வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு…!!!

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியான பகவந்த்சிங் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.மேலும் ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!