செய்திகள் ஓமனில் கப்பல்கவிழ்ந்தது …இந்திய போர்விமானம் மூலம் உதவி…16பேரை காணவில்லை…! Sathya Deva17 July 2024068 views ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்தது. இது குறித்து உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளோடு மீட்பு படையினர் வந்து கடலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இதில் 13 பேர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேடுதல் பணிக்காக இந்திய கடற்படையின் போர் கப்பலான INS Teg – p-18 கடல்சார் கண்காணிப்பு விமானம் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய போர்க்கப்பல் ஜூலை 15ஆம் தேதி முதல் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டு ஜூலை 16ஆம் தேதி கவிழ்ந்த எண்ணெய் டங்கரை கண்டுபிடித்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.