Home செய்திகள்உலக செய்திகள் ஓமனில் கவிழ்ந்த கப்பலிலிருந்து 9 பேர் மீட்பு…. மாயமானவர்களை தேடும் பணி தொடர்கிறது…..!!!

ஓமனில் கவிழ்ந்த கப்பலிலிருந்து 9 பேர் மீட்பு…. மாயமானவர்களை தேடும் பணி தொடர்கிறது…..!!!

by Sathya Deva
0 comment

துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் ஒன்று புறப்பட்டு உள்ளது. கொமராஸ் நாட்டுக்கு சொந்தமான” பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பல் ஓமன் நாட்டில் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த 13 இந்திய மாலுமிகள் 3 இலங்கை மாலுமிகள் அனைவரும் கடலில் மூழ்கினர் .

இது குறித்து தகவல் அறிந்த ஓமன் கடலோர காவல் படையினர் அங்கு வந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நீண்ட நேர தேர்தல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மாலுமிகளை தேடும் பணியில் மீட்டுக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.