ஓலா ஷோரூம்… மின்சார ஸ்கூட்டர்…வைரல் வீடியோ…!!!

ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற அந்த நபர் மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓலா நிறுவனத்தின் மீது அதிருப்தியிலிருந்த சாகர் சிங், தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார். ஷோரூமின் முன்னாள் நின்றுகொண்டு மைக்கில் சோகப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.https://twitter.com/DhanValue/status/1825476881858113889?

இதனால் அவரை சூழ்ந்து மக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது’ என்று பொருள்படும்படி அவர் அந்த பாடலை பாடியது மக்களின் சிரிப்பலைக்குக் ஆழ்த்தியது. இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!