மருத்துவம் லைப் ஸ்டைல் ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது.! தோல் சுருக்கம் இல்லாமல் இருக்க டிப்ஸ்..!!! dailytamilvision.com17 April 20240460 views அனைவரும் தங்களின் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தான். முகத்தின் பொழிவை கெடுக்கும் சில விஷயங்களையும் மற்றும் அதனை தவிர்க்கும் வழிகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். தூசி மற்றும் மாசு மூலம் சருமத்தின் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை கடலை மாவு, சில துளிகள் எழும்பிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்து கழுவி வந்தால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். தொடர்ந்து ஏசி அறைகளில் இருப்பவர்கள் சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அந்த சூழலில் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மையை குறைத்து வரட்சி அடைய வாய்ப்பு உண்டு. எனவே மாய்ஸ்டரைசர் பயன்படுத்துவது நல்லது. மேலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். முகப்பருக்களை கிள்ளக்கூடாது. அவை நிரந்தர வடுக்கலாக மாறிவிடும். வாரம் ஒரு முறை நீராவி பிடிப்பதன் வழியாக சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றலாம். அடிக்கடி கோபப்படுவது கவலை கொள்வதால் முகத்தில் அதிகமாக சுருக்கங்கள் ஏற்படும். எனவே மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சரும பொலிவிற்கு வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ள உணவுகள் முக்கியமானவை. முடிந்த அளவிற்கு சரும பராமரிப்பிற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துங்கள். இரவு தூக்கம் நிறைவாக இருந்தால் கண்கள் பொலிவுடன் இருக்கும். எனவே இரவில் நன்றாக தூங்குங்கள்.