ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கடகம் ராசிக்கு…! யோகமான சூழல் இருக்கும்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!! Rugaiya beevi16 December 202409 views கடகம் ராசி அன்பர்களே…! தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக உயர்த்தி கொள்வீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் தெளிவாக இருக்க வேண்டும். மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வழக்குகளால் சிலருக்கு வெட்டி செலவு இருக்கும். காரிய தடை ஏற்படும். பணவரவு தாமதம் ஆக இருந்தாலும் வரும். பெரியவர்களிடம் பகைமை பாராட்டுவது தவிர்த்து விட வேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். தாமதம் ஏற்படுத்திய பணி சூடு பிடிக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் மெத்தனம் இருக்கும். எந்த வேலை முதலில் செய்வது என்ற குழப்பம் இருக்கும். நிதி நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து விடுவீர்கள். அடுத்தவர்களிடம் வீண் விவாதம் பேச வேண்டாம். இறைவன் சரணாகதி அடைவீர்கள். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். குழப்பங்களை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். இன்பம் பொங்கும் நாளாக இருக்கும். பெண்கள் மாற்று கருத்து உடையவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். முற்போக்கு சிந்தனை உண்டாகும். மாணவ கண்மணிகள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டாம். காதலில் விட்டுக் கொடுப்பது நல்லது. காதலில் பொறுமை காப்பது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்..