செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் கடனை கட்ட முடியாமல் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் நடந்த சோகம்..! Inza Dev6 July 2024073 views சென்னையில் உள்ள ராயபுரத்தை சேர்ந்தவர் குமுதா இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார் .இவர் சுய உதவி குழு ஒன்றில் கடன் வாங்கிய நிலையில் கடந்த மாதம் தவணையை செலுத்த முடியாமல் போய் உள்ளது. இதனால் அந்த குழுவின் ஊழியர் குமுதாவிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்தது காணப்பட்ட குமுதா தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.