உலக செய்திகள் செய்திகள் கடலில் மாட்டிய நீச்சல் வீரர்…. காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்….!!! Sathya Deva20 July 2024066 views ஆஸ்திரேலியாவில் பைரன் விரிகுடா கடற்கரையில் நீச்சல் வீரர் ரிக் ஷெர்மேன் கடலில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். இவரை டாலோ பீச்சில் சக்தி வாய்ந்த அலைகள் தாக்கியதால் அவரால் கரைக்கு திரும்ப முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அவருடன் வந்த நண்பர் அவர் முன் சென்று விட்டார் என நினைத்துள்ளார் . இவர் தண்ணீரில் சிக்கிக் கொண்டு சுமார் 20 நிமிடங்கள் போராடி உள்ளார். இவர் உடனடியாக உதவி தேவை என்பதை அறிந்தார். இவர் அதிர்ஷ்டவசமக தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை அணிந்திருந்தார் .அதில் உள்ள சென்சார்கள் மற்றும் செல்லுலார் இணைப்பு அவர் உயிரை காப்பாற்ற உதவி செய்தது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் உள்ள சென்சார்கள் அவர் ஆபத்தை உறுதிப்படுத்தி ஆஸ்திரேலிய அவசர சேவைகளை தொடர்பு கொண்டு கடலின் ஒருவருக்கு உதவி வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது . அதை தொடர்ந்து மீட்பு பணி வீரர்கள் விரைந்து வந்து அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றினார் . ஷெர்மேன் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உயிர் காக்கும் கருவியாக செயல்பட்டதை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார் என கூறப்படுகிறது.