செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்…. வனத்துறையினரின் தீவர செயல்….!! Gayathri Poomani28 June 2024052 views திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் அனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் அமராவதி உடுமலை வனசரங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது வருகிற ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பின்னர் உடுமலை அமராவதி வனசரகங்கள், உள்ளிட்ட 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. மேலும் இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் வனப் பணியாளர்கள் தொலைபேசி செயலி, ஐ.பி.ஆர்.எஸ் கருவி ஆகிய உதவிகளுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை அடுத்து முதல் மூன்று நாட்களில் காலை நேரம் 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளுக்கு 5 கிலோ மீட்டர் விதம் 3 தினங்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி மற்றும் சிறுத்தை ஆகிய மாமிச உண்ணிகள், மிகப்பெரிய தாவர உன்னிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்த மூன்று தினங்கள் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படுகின்ற பறவைகள், வனவிலங்குகளின் காலடி குளம்பினங்கள், வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவற்றை தொடர்பாக பதிவு செய்ய இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அதே பாதையில் திரும்பி வரும் பொழுது ஒவ்வொரு 4௦௦ மீட்டரிலும் இருக்கும் தாவர வகைகளையும் கணக்கீடு செய்யப்பட இருப்பதாக வனதுறையினர் தெரிவித்துள்ளனர்.