கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்க லட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மர்மமான முறையில் ரமேஷ் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் ரமேஷ் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகத்தின் பேரில் தங்க லட்சுமியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தினமும் ரமேஷ் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமேஷின் முகத்தில் தங்கலட்சுமி தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனால் தங்க லட்சுமியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!!

செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!!