செய்திகள் மாநில செய்திகள் கனமழையால் வீட்டில் சுவர் இடிந்தது…. மூன்று உயிர்கள் பலி…!! Sathya Deva19 July 20240115 views கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது .கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஹவேரி மாவட்டம் மாதப்புர் என்ற கிராமத்தை சேர்ந்த சன்னம்மாள் தொட்டபகசப்பா என்ற தாயும் அவரது இரண்டு குழந்தைகள் உடன் அவர் தாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை பெய்து வந்த கனமழையின் காரணமாக வீட்டில் சுவர் இடிந்து அவர்கள் மேல் விழுந்தது. இதனால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பற்றி தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் உடலை மீட்டு பிரதசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.