செய்திகள் மாநில செய்திகள் கனரக தொழில்துறை மந்திரி…நிலத்தில் இறங்கி நாற்று நட்டார்…!!! Sathya Deva11 August 20240154 views பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் குமாரசாமி. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவின் சீதாபுரா கிராமத்தில் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த குமாரசாமி, அதன்பின் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார். இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் முதல் மந்திரியாக இருந்த குமாரசாமி நிலத்தில் இறங்கி நாற்று நட்டு, பயிரிடும் பணிகளை தொடங்கி வைத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.